ஜீரண மண்டலத்தை சீராக்கி, நல்ல பசியை ஏற்படுத்தும் இஞ்சி! ஸ்லிம்மாக இருக்க விரும்புவோருக்கு இது ஒரு வரம்! இது இதயத்தை பாதுகாக்கும் கவசமாகும். நீரிழிவு நோய் தொடங்கி மலச்சிக்கல் வரை தீர்வுக்கு வழி சொல்லும் இஞ்சியை ஆரோக்கிய வாழ்வுக்கு பயன்படுத்துவது எப்படி..? ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்பது ஒரு பழைய பழமொழி ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். ...