சுமார் 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள் இடை நிலை ஆசிரியர்கள்!  இப்போதும் அவர்கள் போராட்டம் இருட்டடிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆரம்ப கல்வி என்பது அடிப்படையானது! ஆனால், அந்த ஆரம்ப பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் தமிழக அரசு படு அவல நிலையில் வைத்துள்ளதால் தான் இந்தப் போராட்டங்கள்; தற்போது பதினைந்து நாட்களாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.‌ தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது. அவர்களது  கற்றல் இழப்புகளை எப்படி ஈடு செய்ய போகிறோம்? தமிழ்நாட்டின் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவிர்க்க இயலாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...