இந்திய அரசின் அழைப்பில் வந்த ஈரான் கடற்படை வீரர்களை நமது கடற்பகுதிக்குள் வந்து கொலை செய்த அமெரிக்காவை வேடிக்கை பார்த்த இந்தியா! இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி எந்தெந்த நாட்டுடன் இருக்கலாம், இருக்க கூடாது என்பதை தீர்மானிக்கும் அமெரிக்கா! சர்வதேச உறவுகளில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் பாஜக அரசு; இந்தியாவின் அழைப்பில் விசாகபட்டணத்தின் சர்வதேச கடற்படை ஆய்வு மாநாட்டில் 18 நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாடு பிப்ரவரி 15 தொடங்கி 25 வரை பத்து நாட்கள் நடந்தன. கலந்து கொண்ட பதினெட்டு நாடுகளில் ஈரானும் ...

இந்தியாவிற்கு ஆபத்து காலங்களில் உற்றதுணையாகத் திகழ்ந்தது, வர்த்தக ரீதியாக இந்தியாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் அழித்தொழிக்கும் போது, மோடி காட்டிய மெளனம் ஆபத்தானது. இஸ்ரேல், அமெரிக்க பாசம் இந்தியாவிற்கு விரும்பத்தாகாத விளைவுகளைத் தரலாம்; ஈரான் மீது  ஜூன் 13 அன்று தாக்குதல் தொடுத்த இஸ்ரேலை வெள்ளையர்கள் ஆளும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் கண்டித்தன. குளோபல் சௌத் எனப்படும் ஆசிய ஆப்ரிக்க நாடுகளும் இதை கண்டித்தன. இதற்கு ஒரே விதிவிலக்காக இந்தியா (மோடி அரசு) இருந்தது. சர்வதேச நீதிமன்றம் ...