இந்தியாவிற்கு ஆபத்து காலங்களில் உற்றதுணையாகத் திகழ்ந்தது, வர்த்தக ரீதியாக இந்தியாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் அழித்தொழிக்கும் போது, மோடி காட்டிய மெளனம் ஆபத்தானது. இஸ்ரேல், அமெரிக்க பாசம் இந்தியாவிற்கு விரும்பத்தாகாத விளைவுகளைத் தரலாம்; ஈரான் மீது ஜூன் 13 அன்று தாக்குதல் தொடுத்த இஸ்ரேலை வெள்ளையர்கள் ஆளும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் கண்டித்தன. குளோபல் சௌத் எனப்படும் ஆசிய ஆப்ரிக்க நாடுகளும் இதை கண்டித்தன. இதற்கு ஒரே விதிவிலக்காக இந்தியா (மோடி அரசு) இருந்தது. சர்வதேச நீதிமன்றம் ...













