அமெரிக்கா, சீனா இரண்டிடமும் சம நிலை உறவை பேணத் துணிவின்றி, சர்வதேச அளவில் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது பாஜக அரசு! நேற்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு, நாளைக்கு ஒரு நாடகம் என்பதாக சர்வதேச உறவுகளை பேணுகின்ற மோடியால் சீன உறவு சின்னாபின்னமாகி வருவது குறித்த அலசல்; நரேந்திர மோடி பிரதமரானவுடன் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் பன்மடங்கு பெருகி உள்ளதாக பாஜ கட்சியினரும், ஊடகங்களும் ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பத் தொடங்கினர். இத்தகைய சித்தரிப்பு , மோடி பங்கேற்கும் பல்வேறு நிகழ்வுகள் – ...