எது நம் தேசத் தலைவர்கள் காண விரும்பிய இந்தியா ? அந்த மகா கனவு என்னவென்பதை நாம் அறிந்திருக்கிறோமா? இன்று நாம் கண்டுள்ள வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சியா..?  எத்தனை பெரும் வீழ்ச்சியில் நம் சமூகம்..!  அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவே..? என் நண்பர் ஒருவர் இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் மாநாட்டில் 1929ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புலனத்தில் அனுப்பி வைத்து, ”இதை ஆழ்ந்து படியுங்கள்” என்று வேண்டினார். அது மிகப் பெரிய விரிவான தீர்மானம். ‘இந்தியா ஏன் பூரண ...

சுதந்திர இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்பட்டது? நேருவின் ஆளுமை எப்படிப்பட்டது? இந்திரா காந்தி செயல்பட்டவிதம், இந்திய அரசியல் கட்சிகளின் இயங்கு தன்மை, இந்தியாவை மற்றொரு மதவாத பாகிஸ்தானாக்க துடிக்கும் பாஜகவின் செயல்பாடுகள் என அலசுகிறார் சுனில் கில்நானி. சுதந்திர இந்தியாவின் ஐம்பது ஆண்டு வரலாற்றை, ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளார் சுனில் கில்நானி. தற்போது அசோகா பல்கலைக் கழகத்தின் அரசியல் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ளவரான சுனில் கில்நானி, லண்டன் கிங்ஸ் கல்லூரியின் இயக்குனராக இருந்தவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர் மற்றும் விமர்சகர். இந்த நூலை மேலோட்டமாக ...

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சில தினங்களுக்கு முன் லெப்டினன்ட் கர்னல் சஜ்ஜாத்திற்கு பதம்ஷீ பட்டம் வழங்கினார். இவரின் விவரங்கள் தெரிந்த போது பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். சுமார் 50 ஆண்டுகள் பாகிஸ்தானால் தேடப்பட்டு வரும் இவருக்கு இப்படி பகிரங்கமாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்படி இவர் செய்த செயல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள சரித்திரத்தின் பக்கங்களை புரட்டுவோம். பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் லெப்டினன்ட்  கர்னல் காசி  சஜ்ஜாத் அலி  ஜாஹிருக்கு  இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஷீ ...