இந்தியாவுகெதிரான வரி விதிப்புகளும், இந்தியர்களை வெளியேற்றுவதும், இந்திய இளைஞர்கள் விரும்பும் h1b விசாக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதும், ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமையை நிராகரிப்பதுமே டிரம்ப் அரசின் திட்டமாகும்! இதை எவ்வாறு இந்திய அரசு எதிர் கொள்கிறது? டிரம்ப் அமெரிக்க அதிபராக வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்த காலகட்டத்திலேயே உலகெங்கிலுமுள்ள எண்ணற்ற ஊடகங்கள் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆனபின் நடக்கப் போகும் குளறுபடிகளை எழுதிக் குவித்து விட்டார்கள். சர்வதேச உறவுகளில் அமெரிக்கா டிரம்ப் தலைமையில் கொண்டு வரப் போகும் தடாலடி மாற்றங்களை ...