எத்தனை தியாகங்கள், எவ்வளவு இழப்புகள், எவ்வளவு பெரும் ஆளுமைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை திரும்பி பார்த்தால் பெரும் பிரமிப்பே ஏற்படுகிறது. ஏழை, எளிய விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்க்கையில் கட்சி ஏற்படுத்திய தாக்கங்கள் அளவற்றவை; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1925 டிசம்பர் 26 ஆம் தேதி கான்பூரில் கூடிய மாநாட்டில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.  இந்தியாவில் 99 வருடங்கள் கடந்த  நெடிய பயணம் என்று சொன்னாலும் அதனுடைய வேர்கள் அதற்கு முன்பே தொடங்கிவிட்டது. ...