தமிழ் வளர்ச்சி, தமிழ் பாதுகாப்பு குறித்த திட்டவட்டமான செயல்திட்டங்களின்றி, வெறும் இந்தி எதிர்ப்பு அரசியல் பலன் தருமா..? படு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்திக்காரர்களின் ஊடுருவலைத் தவிர்க்கஹ் தவறி , தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பு தமிழ் நாட்டிலேயே பறிபோவதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு.. இங்கு நடப்பது என்ன மாதிரியான இந்தி எதிர்ப்பு அரசியல் ? இந்தி எதிர்ப்புஇந்தியை எதிர்த்துவிட்டால், தமிழ்ப் பாதுகாவலர்களா? மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை போர்டில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் சேர்த்து எழுதப்பட்டதற்கு திமுக தரப்பில் எழுந்த உருட்டல், மிரட்டல்களுக்கு ...














