”ஐயா சாமி, வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள்…” என்று பல்லாண்டுகளாக கதறுகிறோம். ”எல்லா ஆட்சியாளர்களும் செவிடர்கள் தானா? இன்சூரன்ஸ் நிறுவனங்களை மிஞ்சிய கொடியவர்கள் யாரும் இல்லை’’ என தமிழக அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற பென்ஷனர்களும் உரத்துச் சொல்கிறார்கள். ஆனாலும், அதே இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம்! பின்னணி என்ன? ”எங்களிடம் உங்களுக்கு விருப்பமா? இல்லையா ? என்ற ‘ஆப்சனே’ இல்லாமல் வம்படியாக எங்கள் பணத்தை மாதா மாதம் லம்பாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தூக்கித் தருகிறார்கள்!” ”இது சுத்த ஹம்பக்! இந்த இன்சூரன்ஸ் கார்டை வைத்துக் ...
















