அடடா, இதன் அருமை,பெருமை தெரியாமல் இத்தனை நாள் அலட்சியப்படுத்தி விட்டோமே என நம்மை நினைக்க வைக்கும் தும்பையின் மகத்துவங்கள் ஒன்றா? இரண்டா? சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை மருத்துவத்தின் சிகரமாகும்! பெண்களின் முத்துப் பற்களைப் பார்க்கும் போது தும்பை பூ தான் கிராமத்து கவிஞனுக்கு நினைவில் வரும்! எம்.ஜி.ஆர் ஒரு படத்தில், ”தும்பை பூ போலே. துளசி செடி போலே பெண்ணைப் பாருங்க, மாப்பிள்ளை இணங்க..” எனப் பாடுவார்! சிவன் ...

மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்! இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத ...

கால் வீக்கம் என்பது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகும்! ஆகவே, அந்த வீக்கத்திற்கான மூலத்தை கண்டறிந்தால் மட்டுமே சரி செய்யலாம்! இதற்கு மேம்போக்கான சிகிச்சை பலனளிக்காது! எது எதனால் வீக்கம் வரும். எதைத் தவிர்த்து, எதை உட்கொண்டால் தீர்வு பெறாலாம் என ஒரு அலசல்! முதலில் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். அடிபட்ட வீக்கம் அல்லது சுளுக்கால் வரக்கூடிய வீக்கத்தை சரிசெய்ய மிக எளிதான வழிகள் உள்ளன. ஆனாலும், வீக்கத்துக்கான மூல காரணத்தை கண்டறிய வேண்டும். இன்றைக்கு நாம் உண்ணும் ...