அதிமுக, திமுக என்ற இரண்டு ஆட்சிகளிலும் தொடர்ந்து தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன! இதற்கு சர்வ கட்சி ஒத்துழைப்பும் உள்ளது. திருடப்படும் திருப்பூர் மாவட்ட இயற்கை வளங்கள் குறித்தும், கொள்ளை போகும் கோவை மாவட்ட இயற்கை வளங்கள் குறித்தும் பார்ப்போம்; மலைகள் தான் மனித சமூகத்திற்கு மகத்தான கொடைகளை வழங்கி வருகின்றன! நாம் குடிக்கும் தண்ணீர், விவசாயத்திற்கான பாசனத் தண்ணீர், தூய்மையான காற்று, பல்லுயிர் பெருக்கம், அரிய மரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள்..என எத்தனையோ விலைமதிப்பில்லா பயன்கள்! ஆனால், கேவலம் கரன்சி நோட்டுகளுக்காக ...