இயற்கை வழி நலவாழ்வு -1 மருத்துவம் என்பது வாடிப்போன பயிர்களை மலரச் செய்வதைப் போன்றது. உயிருடல்கள் துன்பத்தில் வாடும் போது, துன்பம் நீக்கி அவற்றை இன்பம் பெறச் செய்யவதே மருத்துவம். நோய் என்பது தற்காலிக இடையூறு தானேத் தவிர, வாழ்நாள் சிக்கலல்ல! ஒருவர் நோயுற்ற காலத்தில் மருந்து சாப்பிடுவது ஏற்புடையது, ஆனால் “மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்குத் தான்” என்பது மருத்துவத்தில் வளர்ச்சி அடைந்த சமூகங்களின் நிலைப்பாடு. மருந்துகளோ, மருத்துவமோ உயிருடல்களுக்கு இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமே தவிர, புதிய சிக்கல்களை உருவாக்கிவிடக் கூடாது. ...
















