விவசாயத்திற்கு இரண்டு இலட்சம் கோடி உர மானியம் அரசு தருகிறது! ஆனால், இதன் பலன் விவசாயிக்கு கிடைப்பதில்லை! உரச் செலவும், பூச்சி மருந்து செலவும் பாடுபடும் விவசாயியை எப்போதுமே கடனாளியாக்குகிறது! நவீன விவசாயத்தால் பலனடைவது உரக் கம்பெனிகள், உரக்கடைகள், பூச்சி மருந்து தயாரிப்பாளர்களே! கொஞ்சம் சுதாரிச்சுக்கிடலாமா..? கொஞ்சம் சுதாரிச்சுகிட்டா இந்த நச்சு வலைப் பின்னலில் இருந்து விலகி, சுகமாக செலவு குறைந்த விவசாயம் பண்ணலாம் என்பது எங்க அனுபவம்! விவசாயத்தில் நச்சுக்களே உரங்கள்-பூச்சிக் கொல்லிகள்-களைக்கொல்லிகள் என்ற பெயரில் விதைக்கப்படுகின்றன! இந்த நச்சு இன்னும் எத்தனை ...