அதிமுக பொதுக் குழு தொடர்பாக நீதிமன்றங்கள் எத்தனை முறை தான் எப்படியெல்லாம் மாற்றி, மாற்றி நியாயம் பேசுவார்களோ..! இரண்டுங் கெட்டான் தலைமையில் அதிமுகவை கொண்டு நிறுத்துவதே பாஜகவின் நோக்கம்! அந்த நோக்கத்தை ஈடேற்றவே நீதித் துறையிலும் பெரும் நிர்பந்தம் செலுத்தப்பட்டதோ…? சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டு அதை செல்லாமல் ஆக்கிய வழக்கில் இவ்வளவு மெனக்கிடல்கள் இல்லை. ஆனால், ”எங்க ஆளான ஒ.பன்னீர் செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்க அனுமதிப்பதா?” என பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் கமுக்கமாக காய் நகர்த்தி வருகிறது. ...