மிக நீண்ட இழுபறியாக உள்ளது, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் இரட்டை இலை யாருக்குரியது என்ற தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு. தேர்தல் ஆணையத்தின் இழுபறிக்கு பின் பாஜகவின் அரசியல் குயுக்தி பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கிட்டத்தட்ட அம்பலபடுத்திவிட்டது உயர்நிதிமன்றம்; இரட்டை இலையை தனக்குத் தான் என கேட்ட ஒ.பி.எஸ் கிட்டத்தட்ட ஒற்றை மரமாகி நிற்கிறார். 66 எம்.எல்.ஏக்களில் 62 பேர் இபிஎஸ் வசம் இருக்கிறார்கள். நிர்வாகிகளில் சுமார் 95 சதமானோர் இபிஎஸ் வசம் தான் உள்ளனர். இது சின்னஞ்சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் ...













