ஒரு மிகப் பெரிய வரலாற்று எழுச்சியில் வட இந்தியா குலுங்குகிறது. அங்கே உக்கிரமான போராட்டங்களின் உச்சத்தை நாளும் பார்க்கிறோம். இதோ பக்கத்து மாநிலத்தில் பெங்களுரும் சிலிர்த்து களம் கண்டுள்ளது. கேரள சட்டமன்றத்தில் ஞானேஷ்குமாரை நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும் இதில் மிகவும் பின் தங்கியுள்ளது. நாம் நம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலமிது; தமிழகத்தின் பிரதான மூன்று மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்றும் முடங்கி கிடக்கின்றன. அவமானம்! தில்லியில் கடுமையான அடக்குமுறைகளைக் கடந்து இளம் தலைமுறை ...
















