காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளில் நிற்பது சுயநலமா? அல்லது தன்நம்பிக்கை இன்மையா? என்ற கேள்வி பல்லாண்டுகளாக ஜனநாயக ஆர்வலர்களால் கேட்கப்படுகிறது. சராசரி அரசியல்வாதியை போலன்றி, இரண்டில் ஒன்றென சரியான முடிவுக்கு வருவாரா ராகுல்? ‘இரு தொகுதிகளில் நிற்பதை அனுமதிக்கும் குறிப்பிட்ட சட்டப் பிரிவை திருத்த வேண்டும், இது மிகத் தவறானது..’ என்ற பொதுக் கருத்து ஜனநாயக ஆர்வலர்களிடமும், மக்களிடமும் பல ஆண்டுகளாக வலுப் பெற்று வருகிறது. இதன் விளைவாக கடந்த இருபதாண்டுகளாக ‘ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி’ என்ற ...