ஆம்ஸ்டிராங் கொலையிலும், அதற்கு பிறகான உடல் அடக்க விவகாரத்திலும் தமிழக அரசு காட்டிய காட்டிய அலட்சியங்களும், ஒவ்வாமையும் உணர்த்தும் செய்திகள் என்ன..? பெளத்தத்தை முன்னெடுத்த தலித் சமூக தலைவரின் இறுதி அஞ்சலியை புறக்கணித்த தமிழகத் தலைவர்கள் மன நிலை எப்படிப்பட்டது..? சமத்துவ தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் அகால மறைவு தலித் அரசியலில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. புது கண்ணோட்டத்தில் அறிவுசார் விவாதங்களை எழுப்பும் தலித் அரசியலுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக அவரின் பல செயற்பாடுகளை பட்டியலிடலாம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஏப்ரல் 14 அன்று, சென்னையில் ...