இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, நடப்பாண்டில் மட்டும் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களின் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதுகளும், தொடர் போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. மீனவர் கைதுகளை தவிர்க்க எந்த மாதிரியான ஒப்பந்தம் தீர்வு தரும் ? செப்டம்பர் 27 ம் நாள் கச்சத்தீவு அருகே இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாத்திட உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அக்டோபர்-18 ...