இலவசங்கள் தொடர்பாக விரிவான விவாதத்திற்குள் போவதற்கு முன்பு நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இதில் வேண்டும், வேண்டாம் என்ற இரு தரப்பு அரசியல்வாதிகளும் ஒரே நோக்கம் கொண்டவர்களே! ”மக்களின் தேவை அறித்து ஒன்றை இலவசமாக தருவது என்பது ஒரு அரசியல் கட்சி அல்லது அரசாங்கம் எடுக்கும் முடிவு இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” என வெங்கய்யா நாயுடு தொடங்கி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வரைக்கும் பல அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்! இன்றைக்குள்ள நமது மத்திய மாநில அரசுகள் இரண்டுமே மக்கள் நல அரசுகளல்ல. இவை ...