அன்னதானப் பிரபு! வாரி வழங்கும் வள்ளல்! அடேங்கப்பா! தூய்மை பணியாளர்கள் மீது தான் என்னே ஒரு கரிசனம்! பல்லாயிரம் தூய்மை தொழிலாளர்களுக்கு தினம் மூன்று வேளை இலவச உணவாம்! சர்வ சத்தியமாக இது இலவச உணவில்லை. இதன் பின்னணியை முழுமையாக பார்த்தால் தான் உண்மை நிலையை உணர முடியும்; எவ்வளவு உருக்கமாக பேசி இருக்கிறார்பாருங்கள், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! ஊரே உறங்கிய பின்பும், ஓய்வு அறியாமல் உழைப்பவர்கள் நீங்கள் தான். உங்களால் தான் சுகாதாரமான சுற்றுச் சூழல் உள்ளது.உங்களது இந்த அர்ப்பணிப்பும் சேவை உணர்வும் ...