மேற்கத்திய ஊடகங்களும்,  இந்திய கார்ப்பரேட் ஊடகங்களும் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் குண்டு மழை பொழிந்து, பேரழிவை உருவாக்கி வரும் நிலையில், தந்திரமாக ஒரு கருத்தாக்கத்தை கற்பித்து, நடைபெற்று வரும் கொடூர தாக்குதலுக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டுகிறார்கள்; கருங்காலிகளை அடையாளம் காண்போம்; ஈரான்  இஸ்லாமிய பழமைவாத நாடு. அதன்  ஆட்சியாளர்கள் பெண்களை ஒடுக்குவது உள்ளிட்ட பிற்போக்கு கொள்கைகளைக் கொண்டிருந்தனர். தனிமனித சுதந்திரத்திற்கு ஆதரவான குரல்களை ஒடுக்கினர்…என்பதோடு ஆயிரக்கணக்கில்  உள் நாட்டில் மனிதப் படு கொலைகளை நடத்தினர்.. என்பதையெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துச் சொல்லி, அங்கு பாதிக்கப்பட்ட ...