உலக அரங்கில் அமெரிக்காவின் அதிகார மிரட்டல்களுக்கு அடங்க மறுக்கும் நாடாக ஈரான் இருக்கிறது. இதனால் ஈரானுக்கு பல பொருளாதாரத் தடைகளை உருவாக்கியதோடு, அங்கு அரசுக்கு எதிரானவர்களை உருவாக்கி பண உதவியும் தந்து குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது அமெரிக்கா; ஒரு அலசல்; திட்டமிட்டு வெனிசுலாவிற்குள் நுழைந்து அதன் அதிபரை கைது செய்து அந்த நாட்டை அமெரிக்க ராணுவம் கொண்டு முற்றுகையிட்டதையடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததை அகில உலகமும் அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டிருக்கும் நிலையில், ...












