இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த சாமியாராகத் திகழும் ஜக்கி வாசுதேவ் குறித்தும், ஈஷா யோகா மையத்தில் சிறுமிகளுக்கு நடக்கும் மர்மமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் வட இந்திய பத்திரிகையாளரான ஷியாம் மீரா சிங் மிக துல்லியமாக தகவல்கள் திரட்டி ஆவணங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளார். அவை மிகப் பெரிய அதிர்ச்சி ரகம்; ஒரு காலத்தில் முற்போக்காளர் போன்ற தோற்றம் காட்டி, சகல தரப்பினரையும் கவர்ந்து சிறப்பான ஆன்மீக மற்றும் யோகா பயிற்சிகளை தந்து, மக்களின் பேராதரவை பெற்றவர் ஜக்கி வாசுதேவ். ஆனால், தற்போது வெளியாகும் செய்திகள் அவர் ...
ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய வி.வி.ஐப்பிக்களின் வருகையோடு ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா அரங்கேறுகிறது! ஒரு ஆன்மீக மையம் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் என ஆகப் பெரிய அதிகார மையங்களை இதற்கு தொடர்ந்து அழைப்பது ஏன்? அதிகார மையங்களிடம் இருந்து விலகி நிற்றல் அல்லவா ஆன்மீகத்தின் இயல்பாக இருக்க முடியும். காரணம், மிக எளிமையானது! தன்னுடைய சட்ட விரோத, சமூக விரோத செயல்பாடுகள் மீது அரசு அமைப்புகள் எதுவும் ...
ஆன்மீகத்திற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து சர்ச்சையில் அடிபட்டவண்ணமுள்ளது. ஈஷா மையத்தை ஒரு தீய சக்தியாக சித்தரிக்கும் தரப்பினர் ஒரு புறமும், இல்லை அது உன்னதமான ஆன்மீக மையம் என நம்பும் தரப்பு மறுபுறமுமாக ஆர்பரிக்கின்ற சூழலில் சில யதார்த்தங்களை பார்ப்போம்; ஈஷா யோகா மையம் மற்றும் ஆன்மீகத் தலம் தினசரி பல்லாயிரக்கணக்கில் மக்கள் செல்லும் இடமாக உள்ளது. தமிழகத்தில் பல லட்சம் மக்கள் அதில் யோகா பயிற்சியும், தியான பயிற்சியும் எடுத்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு நிறைய முன்னெடுப்புகளை ஈஷா ...