கருப்பசாமி, அருப்புக் கோட்டை பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறி இருப்பது! காங்கிரசை காலியாக்கிக் கொண்டிருப்பது! திராவிடக் கட்சிகளை அடிமைகளாக ஆட்டுவிப்பது! பாமக போன்ற ஏராளமான சாதிக் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட வைப்பது! கண்ணுக்கு தெரிந்த வரை – இன்றைய நிலையில் – மற்ற கட்சிகளின் தலை விதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள பாஜகவை தீர்த்துக் கட்டும் அரசியல் சக்தி ஒன்றைக் கூட காண இயலவில்லையே! க.செபாஷ்டின், வேலூர் ‘அரசுப் ...

உலகில் அடிமைத் தனத்திற்கு பேர் போனதில் தமிழ் சினிமா துறையை மிஞ்ச வேறொன்றில்லை. திரைத் துறைக்கு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரை அரங்க உரிமையாளர் சங்கம்.. எனப் பல சங்கங்கள் உண்டு. இவை எல்லாம் உதயநிதி என்ற ஒற்றை மனிதரின் விரலசைவுக்கு கட்டுப்பட்டு பிழைப்பு நடத்துவதை என்னென்பது? இன்றைய தினம் திரைத் துறையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது எனக்காக! தியேட்டர்கள் கட்டப்பட்டு இருப்பது எனக்காக! என உதயநிதி நம்புகிறார்! இன்றைக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரெட்ஜெயண்டை மீறி வேறொரு நிறுவனத்தால் ரிலீஸ் செய்ய ...