”ஊழலற்ற நேர்மையான ஆட்சி தருவோம். தப்பு செய்ய மாட்டோம், செய்தவர்களையும் விட மாட்டோம்” என்று சொல்லிய முதல்வர் விஜய்யின் ஆட்சியில் உதவிப் பேராசிரியர் தேர்வில் இத்தனை முறைகேடுகளை அனுமதிப்பதா? உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு ஊழல் முறைகேட்டில் தொடர்புள்ளதா? இதற்காகத்தானே டெல்லியில் இளைஞர்கள் லட்சக்கணக்கில் அணி திரண்டனர். கஷ்டப்பட்டு படித்து பரிட்சை எழுதியவர்களை பின் தள்ளிவிட்டு, காசு கொடுப்பவர்களை பாஸ் பண்ணிவிடும் கோல்மால்கள் நீட் தேர்விலும், சி.பி.எஸ்.இ யிலும் நடந்தன…! நேர்மையாக பரிட்சை நடத்த திரானியற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதானை பதவி ...
















