தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதர் நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி எனும் நான்கு கோவில்களின் உறைவிடமான  ஆன்மீக பூமியை வன்மமும், வெறுப்பும் மிகுந்த நரகமாக மாற்றி வருகின்றனர் பாஜகவினர் என்பதற்கு அதிர்ச்சி தரும் இந்த சம்பவமே சாட்சியாகும்; உத்தராகாண்ட் மாநில தலைநகரான, டேராடூனில் ஜுலை 14 அன்று கிறித்துவர்களின் வழி பாட்டுத்தலமான ஒரு சிறிய தேவாலய இல்லத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இந்து மத தீவிரவாதிகள்  புகுந்து அங்கிருந்தோரை தாக்கி, காயப்படுத்தி அங்கிருந்த பொருட்களையும் உடைத்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளனர். டேராடூனின் நேரு காலனியில் ...