நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நமக்கு குறையக் கூடாது. ரொம்பச் சரி! ஆனால், நகரமயமாக்களுக்காக உள்ளாட்சிகள் குறையலாமா? சின்னஞ் சிறு உள்ளாட்சிகளின் பிரதிநிதித்துவம் அடியோடு உருக்குலைந்து போகலாமா? 91,975 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிப் போடலாமா..? மக்களவை தொகுதி மறுவரையறை தற்போது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசு பொருளாகியிருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைக்கான தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தங்களுக்கான மக்களவைத் தொகுதிகள் சிலவற்றை இழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 மக்களவை தொகுதிகளின் ...
அதிமுக அரசு உள்ளாட்சி விவகாரங்களை அணுகியதைப் போலவே, திமுக அரசும் தற்போது அணுகுகிறது. கிராம சபை கூட்டங்கள் ரத்து, உள்ளாட்சி தேர்தலை ஆனவரை தள்ளிப் போடுவது, உள்ளாட்சி அதிகாரங்களை ஊனப்படுத்துவது…என்பது தொடர்கதையா..? முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளான சென்ற ஞாயிற்றுகிழமையில் வடபழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றன. அதில் அமைச்சர்கள், விஐபிக்கள் பங்கேற்றனர். அதே போல முதல்வர் ஸ்டாலினே அறிவாலயத்தில் திமுக நிர்வாகி பூச்சி முருகன் திருமணத்தை திமுக உயர்மட்டத் தலைவர்கள் உடை சூழ நடத்தை வைத்தார். அப்படி இருக்க குடியரசு ...