அப்பப்பா என்னென்ன பேரங்கள், காய் நகர்த்தல்கள்! மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு கன்னாபின்னா குதிரை பேரங்கள்! வரப்போகிற உள்ளாட்சி நிர்வாகம், தரப்போகிற சேவை எப்படி நேர்மையாக இருக்கும்? ஏன் இந்த மறைமுக தேர்தல் திணிப்பு? யாருக்கு ஆதாயம்? மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும், அந்தந்த மாவட்டத்தின் முக்கிய புள்ளிகளும் அவரவர் ஆதரவாளருக்கு பதவிகளை வாங்கித் தருவதில் பகிரங்க பிரயத்தனம் செய்து வருகின்றனர். இதில் தோற்றுப் போகிறவர்களுக்கு இது ஒரு கவுரவ பிரச்சினையாகவும் வாய்ப்புள்ளது. மன வருத்தங்கள் வளரவும் வாய்ப்புள்ளது.அது மட்டுமின்றி ...