‘அடி, உதை, தாக்கு! அடிபட்டவன் மேலேயே காவல்துறையை ஏவி எப்.ஐ.ஆர் போடு..’- இது தான் இன்றைய திமுக ஆட்சியின் ஸ்டைலா..? எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காது! முதல்வர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்! ‘ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுது..’ எனச் சொல்பவர்களை மட்டுமே பிடிக்கும் என்றால் எப்படி..? ‘பிரபல ஊடகங்களும், தற்போதைய திமுக அரசும் மிக இணக்கமாக இருக்கிறார்கள்’ என்பது உண்மையா..? என்றால், ‘இணக்கமாக இருக்கிறாங்க தான் ஆனால், இல்லை..’ என்ற ஒரு குழப்பமான பதிலே வரும்! உண்மை என்னவென்றால்.., திமுக ஆட்சியில் ஊடக முதலாளிகள் ...