சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் இன்னும் ஊராட்சிகளில் ஓங்கி நிற்கும் சாதி ஆதிக்க மனோபாவத்தை தகர்க்க முடியவில்லை. தலித்துகள் ஒப்புக்கு தான் தலைவர்கள்! ஆனால், உரிமை மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களாக எப்படியெல்லாம் நடத்தப்படுகின்றனர்..! திராவிட மாடல் ஆட்சியில் தீண்டாமை தொடர்வதா..? சமூக நீதி, மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்று ஓயாமல் பேசிக் கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில்தான் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான பழங்குடி, தலித்  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஏற்படும் புறக்கணிப்பு, அநீதிகள் தொடர்கதையாக உள்ளது. ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுப்பு, தலைவர் ...