ஊழல் செய்வதில் சாதனை படைத்தவர் எஸ்.பி.வேலுமணி. இவருக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு பரிபூரணமாக இருந்தது என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றாலும், இன்றைக்கு மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலாக உள்ள எஸ்.வி.ராஜி வேலுமணி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரானது அதிர்வை ஏற்படுத்தியது! அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்து இருந்தது. ...