‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், அது ஏன் சாத்தியமே இல்லாமல் போய்க் கொண்டுள்ளது. நவீன அறிவியல் யுகத்துடனும், வணிக யுகத்துடனும் இணைந்திருக்கிறதா தமிழ்? நம் அலுவலக செயல்பாடுகளிலும், புழக்கத்திலும் தமிழை எந்த அளவு பயன்படுத்துகிறோம்? தமிழை பயன்பாட்டு மொழியாக்க செய்ய வேண்டியது என்ன? வணிக நடைமுறைகளிலே இணைந்து உலக அளவில் பேசப்பட்டு வளர்ச்சியடைந்திருக்கிறதா, தமிழ்? நம் தமிழ் மொழி அறிவியல் துறையிலாவது சற்று சாதித்திருக்கிறது. ஆனால், நம் தமிழ் மொழி நமது வணிகத்தில் இருக்கிறதா? அது ஏன் இல்லை? ...