கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டதன் நோக்கம் உண்மையில் நேர்மையான விசாரணை சார்ந்ததா? கடந்த காலங்களில் என்.ஐ.ஏ விசாரித்த வழக்குகளின் யோக்கியதை என்ன? இதன் பின்னுள்ள அரசியல் நோக்கங்கள் என்ன? கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு , தமிழகத்தின்அரசியல் தட்ப வெப்பத்தையும் சீர்குலைத்துள்ளது. பலரும் பல கோணங்களில் அனுமானங்களின் அடிப்படையில் கருத்து கூறி புழுதியை கிளப்பி வருகின்றனர் . தமிழக காவல்துறை விரைந்து செயல்பட்டு அவ்விபத்தில் இறந்தவரை அடையாளப்படுத்தி, அவரது கூட்டாளிகளாக கருதப்படுவோர் 5 பேரையும் கைது செய்து, இது பயங்கரவாத் ...