சங்கீத மேதைமையில் கேள்விக்கு அப்பாற்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி! ஆனால், அவர் ஏன் தான் பிறந்த இசைவேளாளர் குலத்தின் அடையாளத்தை மறைக்க நிர்பந்திக்கப்பட்டார்! பிராமணர்கள் ஏன் அவருக்கு புனித பிம்பத்தை கட்டமைத்து, தங்களவராக சித்தரித்தனர். டி.எம்.கிருஷ்ணா பேசிய உண்மை சுடுகிறதா..? ஒரு அலசல்; ”எம்.எஸ். அம்மாவை இழிவாக பேசிவிட்டார், அவரது நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டார்… ஆகவே, டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது” என முழங்குகிறார்கள் சிலர்! இவர்கள் நீதிமன்றம் சென்று ‘இந்தாண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரிலான ‘சங்கீத கலாநிதி’ விருதை பாடகர் ...