எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோ தற்போது எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கலைக் கல்லூரியாக மாற்றமடைந்து சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் எளிய குடும்பத்து பெண்களின் கல்விக் கோவிலாக திகழ்கிறது! பல்லாயிரம் மாணவிகள் பயிலும் இந்தக் கல்லூரிக்கு ஒரு தீராத சுகாதார பிரச்சினை ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது. எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோ பிரைவே லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இடத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சியின் அனுமதியின்றி சுமார் 50 க்கு மேற்பட்ட மாடுகளைக் கொண்ட ஒரு மாட்டுப் பண்ணை இயங்கி வருகிறது.  நகரத்தின் மையப் பகுதியில் அந்தக் கால ...