‘பாராளுமன்றம் என்பது மக்களுக்கானதானதல்ல’ என்பது நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருகிறது. சர்வாதிகார ஆட்சியை சாத்தியப்படுத்த நகர்ந்து கொண்டிருக்கிறது பாஜக அரசு! இந்தச் சூழலில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தும் தெரிந்தோ, தெரியாமலோ பாஜக அரசின் சதிச் செயல்களுக்கு ஒத்திசைவாய் உள்ளன; மஞ்சள் புகை வீச்சைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக ஆக்ரோஷமாக  கேள்விகள் எழுப்பினர். பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பான விளக்கம் தந்திருக்கலாம். அது நடக்காததால் எதிர்கட்சி எம்.பிக்கள் நான்கைந்து நாட்களாக சபையை முடக்கும் வண்ணம் போராடினார்கள்! இதைத் தொடர்ந்து  நாடாளுமன்ற வரலாற்றிலேயே ...