குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடியது எலுமிச்சை. இது பித்தத்தைப் போக்கும், புத்துணர்ச்சி தரும், தலைவலி தீர்க்கும், வாந்தியை நிறுத்தும், உடல் சூட்டைக் குறைக்கும், வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்…! இந்தக் கட்டுரையில் எலுமிச்சையின் இன்னும் பல சிறப்புகளை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் பழம் என்றால் அது எலுமிச்சையைத் தான் குறிக்கும். சித்த மருத்துவ நிபுணத்துவம் என்பது சித்த வைத்தியத்துடன் நின்று விடுவதில்லை. சித்த மருத்துவத்தின் தத்துவங்களில் சிறந்து விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், ...