எல்லா கட்சிகளிலும் உழைப்பவர்கள் உழைத்து ஓடாக தேய்வதும், ஒரு சிலர் எந்த உழைப்புமின்றி உச்ச நிலையிலேயே உலா வருவதும் இருக்கின்றது. பாஜகவில் இதற்கு நிதர்சனமான உதாரணம் எல்.முருகன். இவர் முக்கியத்துவம் பெற்றதும், தற்போது விலக நேர்ந்ததும் இன்றைய திரைமறைவு அரசியலின் அவலத்திற்கும், சந்தர்ப்பவாத சாகச அரசியலுக்கும் சான்றாகும்;  கட்சியில் சேர்ந்து கால் நூற்றாண்டு ஆகியும் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்! தரப்பட்ட எந்தப் பதவியிலும், பொறுப்புகளிலும் எதையும் சாதித்திராதவர்! ஒழுக்கக் கேடான நடத்தைகளில் உச்சகட்ட பெயரை சம்பாதித்திருப்பவர்! இப்படிப்பட்ட ...