சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், எ.வ.வேலுவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு! இருவருமே பேருந்து நடத்துனர்களாக இருந்து பெரும் புள்ளி ஆனவர்கள்! ஆனால், எ.வ.வேலுவின் பொருளாதார சாம்ராஜ்ஜியத்தின் முன்பு ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால உழைப்பின் மூலம் சேர்ந்த பொருளாதாரம் ஜுஜுபி தான்! உண்மையில் தன் சாம்ராஜ்ஜியத்தின் சொத்து மதிப்பு குறித்த துல்லியமான தகவல் எ.வ.வேலுவுக்கே முழுமையாக தெரிய முடியாத அளவுக்கு அது பரந்து விரிந்தது. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவ கல்லூரி, மற்றும் ஏகப்பட்ட நர்சிங், பார்மசி கல்லூரிகள், புகழ் பெற்ற ...
















