பணக்காரனுக்கும் ஏழைக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி நிலவுகிறது…? அரசின் சட்ட திட்டங்கள் யாரால் உருவாக்கப்படுகின்றன? யாருக்கு பயன்படுகின்றன? ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாகவே தொடர்வதும், பணக்காரர்கள் மேன்மேலும் பணக்காரர்கள் ஆவதும் எப்படி..? – ஒரு ஆழமான அலசல்; இரயில் பயணமொன்றில் அருகே அமர்ந்திருந்த ‘பெரிய மனிதர்’ ஒருவரோடு உரையாட நேர்ந்தது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நாங்கள் அமர்ந்து கொண்டிருந்தோம். வழக்கம் போல, இரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகளும் கூட அந்த இரயிலில் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அப்படி ஒரு குடும்பம் கழிவறைக்கு அருகே இருக்கும் இடத்தில் ...