உலக வங்கி, ஐ.எம்.எப் போன்றவை பல்லாயிரம் கோடிகள் கடன்களை தருகின்றன. அவை என்னென்ன நிபந்தனைகளை விதிக்கின்றன? எந்தெந்த திட்டங்களுக்கு தரப்பட்டு என்னென்ன விளைவுகள் உருவாகியுள்ளன..? என பார்த்தால் அதிர்ச்சியே ! இதனால் இரு வர்க்கங்களுக்கான இடைவெளி அதிகரித்துள்ளதோடு, இந்தக் கடன்கள் நம் கழுத்தை நெறிக்கின்றன; உலகளாவிய வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு ஆகிய நோக்கங்களுடன் செயல்படும் World Bank பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கு நிதி வழங்கியுள்ளது. ஆனால் அதன் கொள்கைகள் மற்றும் கடன் வழங்கும் முறைமைகள் சமூக நீதி, ...














