கொள்கை பிரகடனங்கள், மேடைப் பேச்சுகள், ஊடக விளம்பரங்களால் திமுக அரசை மதிப்பிட முடியாது. அதன் செயல் திட்டங்கள் வழியாகவே மதிப்பிட வேண்டும். அந்த வகையில் திமுக அரசை துறைவாரியாகப் பார்த்தால், அரசுத் துறைகளில் ஒப்பந்தக் கூலி முறை, தனியார் மயம், பணிப் பாதுகாப்பின்மை குறித்த அச்சம்.. எப்படியெல்லாம் நிலவுகிறது என ஒரு அலசல்; ”திமுக ஆட்சிக்கு வந்தால் சமூக நீதியை நிலை நாட்டும்” என்று ஸ்டாலின் வாக்குறுதிகள் பலவற்றைத் தந்தார்! குறிப்பாக தற்போது அரசுத் துறைகள் பலவற்றில் குறிப்பாக பள்ளிக் கல்விதுறை, மருத்துவத் துறை, ...













