சிறுகதை ஒன்றைச் சினிமாவாக்க, அதன் இலக்கியத் தரம் குறையாமல் மெனக்கெட்டு இருக்கிறார்கள். மனித மனங்களில் எழும் வன்மத்தையும், குரோதத்தையும் படம் பேசினாலும், காட்சிகளில் அந்த வன்முறை இன்றி நகைச்சுவையும், சுவாரஸ்யமுமாக உள்ளது. திரைக்கதையின் தெளிவுக்கு இது உதாரணம். பாத்திரங்களின் வடிவமைப்பும், நடிகர்களின் தேர்வும் இதை செய்து முடித்திருக்கின்றன. திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் இணையதளத்திலும் வெளியாகி இருக்கும் மலையாளப் படம் “ஒரு தெக்கன் தள்ளு கேஸ்”. எழுத்தாளர் இந்துகோபன் எழுதிய ’அம்மிணி பிள்ளை வெட்டு கேஸ்’ என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத் திரைப்படம். இயக்குனர் ...