அணுசக்தி விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் வாழ்க்கை திரைக் காவியமாகி உள்ளது. ஏழு ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது. அறிவியல் வளர்ச்சி அழிவுக்கு பயன்படுத்தப் பட்டதால் குற்ற உணர்வுக்கு ஆளான விஞ்ஞானிக்கும், ஆட்சியாளர்களுக்கும் உருவான முரண்களை விவரித்து, மனித நேயத்தை பேசுகிறது..! கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலையில் திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ...