ஆகா, உடனே பணம் கிடைக்கிறதே என லோன் ஆப் மூலமாக கடன் வாங்கியவர்கள் இன்று நிம்மதியைத் தொலைத்து கதறுகிறாங்க பைத்தியம் புடிச்ச மாதிரி! இன்னும் சில பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்! கண்ணுக்கு தெரியாதவர்களிடம் இருந்து பெறும் கடன்கள் நம்மையே காவு கேட்கும்! கடந்த ஒரு மாதத்தில் என் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு நேர்ந்த சம்பவங்கள் யாரையும் உலுக்கி எடுத்துவிடும்! இரண்டு சம்பவங்களையும் நேரிடையாக சந்திக்கும் சூழல் எனக்கு உருவானது. கடன் வாங்குவது பொதுவாக எளிதான காரியம் இல்லை. வங்கி, நிதி நிறுவனங்களில் பல கட்ட ...