ஜனநாயகத்தை நிலை நிறுத்தவே அரசியல் கட்சிகள் என்றால், அந்தக் கட்சிகளுக்குள் ஏன் ஜனநாயகம் சாத்தியமாவதில்லை? எல்லா கட்சிகளுக்குள்ளும் தலைவர்கள் சர்வாதிகாரியாக செயல்பட முடிவது எப்படி? கூட்டுத் தலைமை, கலந்துரையாடல் ஏன் சாத்தியப்படுவதில்லை? ஜனநாயகம் பெயரளவிலும், சர்வாதிகாரமே நடைமுறையாகவும் இயங்கும் கட்சிகள் ஓரு அலசல்; நம்ம நாட்டை  ஜனநாயக நாடென்று சொல்கிறார்கள்! அந்த ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றவே அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உண்மையில் இங்கு நடைமுறையில் ஜனநாயகம் இருக்கிறதா? குறிப்பாக ஜனநாயகத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக தங்களை சொல்லிக் கொள்ளும் கட்சிகளில் ...