கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு சிறப்பு கட்டுரை திரைப்படங்களில் பெண் பாடுவதாக அமைந்த பாடல்களில் எல்லாம் கண்ணதாசன் பெண்ணாகவே அவதாரம் எடுத்து தன் அனுபவத்தை சொல்கிறாரோ.. என்று திகைக்க வைக்கும் வண்ணம் பாடல் வரிகள் இருக்கின்றன. ..! பெண்களால் மட்டுமே உணர முடிந்த பெண் மனதின் நுட்பங்களை தன் பாடல் வரிகளில் கண்ணதாசன் சொல்லிய பாங்கு வியக்க வைக்கின்றன; தமிழ்ப் புலமை, சொல்லாற்றல், கவி நயம் ஆகியவை பொதுவானவை! அவற்றை பயிற்சியுடைவரகள் எவரும் முயன்றால் அடையலாம். ஆனால், மனிதர்களின் மகிழ்ச்சியை, துன்பத்தை, தவிப்பை, இயலாமையை, காதல் ...


















