கண்ணதாசனை தற்போது வானாளவப் புகழ்கிறார் இளையராஜா! ஆனால், அன்று அவரை பெருமளவு விலக்கியே வைத்தார். சில முட்டல், மோதல்கள் இருந்தன. கண்ணதாசனுக்கு மிகக் குறைவே வாய்ப்பளித்தார் ராஜா. இதன் பின்னணி என்ன? கண்ணதாசனின் பேராளுமையால் இளையராஜாவிற்குள் நிகழ்ந்த உளவியல் சிக்கல்களை அலசுகிறது இந்தக் கட்டுரை; தமிழகத்தின் சமகால வரலாற்றில், வாழும் காலத்திலேயே மக்களால் பெரிதும் போற்றப்பட்ட கவிஞர் என்றால், அது கவியரசர் கண்ணதாசன் தான்! அவர் மீது மக்களுக்கு அப்படியோர் ஈர்ப்பு இருந்தது. தமிழக மக்கள் அவரை கொண்டாடி மகிழ்ந்தனர். சதா சர்வ காலமும் ...